பர்த்டே பார்ட்டிக்கு சென்ற பள்ளி மாணவி... ஜூஸில் மது கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. கல்லூரி மாணவர் கைது

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த பள்ளி மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பர்த்டே பார்ட்டிக்கு சென்ற பள்ளி மாணவி... ஜூஸில் மது கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. கல்லூரி மாணவர் கைது

சென்னை வியாசர்பாடி சத்யா நகரில் வசித்து வரும் சந்தோஷ் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சந்தோஷின் நண்பர் ஒருவருக்கு கடந்த வாரம் பிறந்தநாள் வந்தது. இதனால் சந்தோஷ் நண்பர் கோவளத்தில் வாடகைக்கு ஹெஸ்ட் ஹவுஸ் எடுத்து பிறந்தநாள் விழா கொண்டாட முடிவு செய்துள்ளனர். பிறந்த நாள் விழாவிற்கு சந்தோஷ் உட்பட தனது நண்பர்கள் இரண்டு பேருடன் தேனாம்பேட்டையை சேர்ந்த பிளஸ் 2 மாணவியான தனது தோழியையும் அழைத்து சென்றிருக்கிறார்.

ஹெஸ்ட் ஹவுஸில் நண்பரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய பிறகு, நண்பர்கள் இருவரும் கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ஓட்ட சென்று விட்டனர். அப்போது சந்தோஷும் அவரது தோழியும் தனியாக இருந்திருக்கிறார்கள். அப்போது நீண்ட நேரம் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர். தனக்கு சாதமாக தனிமையை பயன்படுத்திய சந்தோஷ், குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்துள்ளார்.

மாணவி குளிர்பானம் என்று நினைத்து மதுபானத்தை அதிகளவில் குடித்துவிட்டார் இதில் போதை தலைக்கேறி மாணவி தள்ளாடி உள்ளார். அப்போது சந்தோஷ் பண்ணை வீட்டில் உள்ள படுக்கை அறைக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளார். மேலும் மாணவியை ஆபாசமாகவும் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்

பிறகு மாணவிக்கு போதை தெளிந்து நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து கேட்டுள்ளார். அதற்கு சந்தோஷ் வெளியில் சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று மாணவியை மிரட்டி உள்ளார். அத்துடன் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு உன் வாழ்க்கையை அழித்துவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதனால் மாணவி பயந்து போனாராம்.

இதன்பின்னர் மாணவியை சந்தோஷ் தோனம்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் அருகே இரவு விட்டுவிட்டு சென்றிருக்கிறார். தனது மகள் காலையில் சென்றவள் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்ததால் எங்கு சென்றாய் என்று அவரது தாய் விசாரித்து இருக்கிறார். ஏன் மிகவும் சேர்வுடன் இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது மாணவி அழுதப்படி நடந்த சம்பவத்தை அவரது தாயிடம் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய். உடனே சந்தோஷ் குறித்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவர் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதைதொடர்ந்து, போலீசார் கல்லூரி மாணவன் சந்தோஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவியை செல்போனில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.