யானையை விரட்டப் போன லாரி ஓட்டுநர் பலி!!!

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே வந்த காட்டு யானையை விரட்டியபோது யானையிடம் சிக்கி லாரி ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

யானையை விரட்டப் போன லாரி ஓட்டுநர் பலி!!!

ஈரோடு மாவட்டம்: சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி கோவில் அருகே உள்ள தெப்பக்குளம் பகுதியில் இரவு நேரங்களில் லாரி ஓட்டுனர்கள் சரக்கு லாரிகளை நிறுத்தி அங்கேயே தூங்குவது வழக்கம். திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்திருப்பதால், நள்ளிரவில் வரும் லாரி ஓட்டுநர்கள் தங்களது சரக்கு லாரிகளை தெப்பக்குளம் பகுதியில் நிறுத்திவிட்டு தூங்குவது வழக்கம்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென அங்கு வந்த காட்டு யானை அங்குமிங்கும் சுத்தியதை கண்ட லாரி ஓட்டுநர்கள், யானையை துரத்த கும்பலாக சேர்ந்து சத்தமிட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை, லாரி ஓட்டுநர்களை துரத்த ஆரம்பித்தது. அப்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியாவை சேர்ந்த லாரி ஓட்டுனர் சீனிவாசன் என்பவர், ஓட முடியாமல், யானையிடம் சிக்கிக் கொண்டார்யானை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே லாரி ஓட்டுனர் சீனிவாசன் உயிரிழந்தார்.

லாரி ஓட்டுனர் ஒருவர், காட்டு யானையை துரத்தும் காட்சிகளை, செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த போது, சக லாரி ஓட்டுனரை யானை தாக்கி கொன்ற சம்பவம், அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.