
கீழ்வேளுரில் உள்ள கோகூர் கிராமத்தில் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தரப்பினர் செங்கல் சூலை போடுவதற்கு மணல் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அம்பேத்கர் என்பவர் பொதுமக்களை திரட்டி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், அம்பேத்கர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தாக்குதல் குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத போலீடசாரை கண்டித்து அம்பேத்கரின் உறவினர்கள் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.