பல கோடி மதிப்பிலான போன்,லேப்டாப்கள் விற்பனை ; மோசடி செய்த கும்பல் கைது...!

பல கோடி மதிப்பிலான போன்,லேப்டாப்கள் விற்பனை ; மோசடி செய்த கும்பல் கைது...!
Published on
Updated on
1 min read

சுமார் 8கோடி மதிப்பிலான 1074 ஐ போன் மற்றும் 3 ஆப்பிள் லேப்டாப்களை விற்று மோசடி செய்த மூன்று நபர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மோசடி செய்த ஆசாமி தலைமறைவு :

சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் ஃப்ரண்ட்யர் பிசினஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ரீஜனல் மேனேஜராக தினேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்த நிறுவனத்தில் கணக்கு மேலாளராக பணிப்புரியும்  பிரதாப் பசுப்பிலேட்டி மற்றும் டெலிவரி பிரிவில் பணிபுரிந்து வந்த குமாரவேல் என்பவரும் சேர்ந்து 1074 ஆப்பிள் செல்போன்கள், மூன்று ஆப்பிள் லேப்டாப்கள் என எட்டு கோடி ரூபாய் வரையிலான பொருட்களை விற்று தலைமறைவாகியுள்ளனர்.

புகார் மனு :

தகவல் அறிந்து அந்நிறுவன மேனேஜர் காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.மோசடி செய்த அவர்களை கண்டுபிடித்து உரிய பணத்தை மீட்டுத் தருமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். இந்த புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். 

மோசடி கும்பல் கைது :

தலைமறைவான பிரதாப் பசுப்புலேட்டி தனது சொந்த ஊரான நெல்லூரில் இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில், ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார் நெல்லூர் விரைந்து பிரதாப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவருடன் பணியாற்றிய சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த குமாரவேல் மற்றும் நெல்லுரை சேர்ந்த வெங்கடேச வரலு ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.பல கோடி மதிப்பிலான பொருட்டுகளை விற்று மோசடி செய்த மூன்று நபர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com