தஞ்சையில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை..!

தஞ்சையில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை..!

தஞ்சையில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பீரோவை உடைத்து 48 சவரன் நகை 5 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய்யுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் பூக்கார 1-ம் தெருவை சேர்ந்தவர் வினோத் என்ற கோபாலகிருஷ்ணன்  தனியார் இருசக்கர நிதி நிறுவன அதிபர். இவர் வீட்டை பூட்டி விட்டு துக்க நிகழ்விற்கு சென்று விட்டார். இன்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. 

மூன்று அறைகளில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 41 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதேபோல் அதே பகுதியில் உள்ள மகேஸ்வரி என்பவரது வீட்டிலும் பீரோவை உடைத்து 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்தும் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே தெருவில் பக்கத்து வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.