
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில் தோவாளை வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு புதியதாக ரேஷன் கார்டுகள் அண்மையில் வழக்கப்பட்டன. 180க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், ரேஷன் கார்டு பெற்றுக் கொண்டவர்களை தொடர்பு கொண்ட வருவாய் ஆய்வாளர் மந்திரமூர்த்தி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர் பயனாளி ஒருவருடன் பேசிய ஆடியோ சமூக வலைதங்களில் வைரலானது. அதில் பயனாளி ‘100 போதுமா சார் என்று கேட்க, மறுமுனையில் பேசிய அதிகாரி, கூடுதலாக ஒரு சைபர் சேர்த்து ஆயிரம் ரூபாயாக கொடு’ என்று கேட்கும் ஆடியோ வைரலாகியிருந்தது.
இவ்விவகாரம் பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், வருவாய் ஆய்வாளர் மந்திர மூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.