5 குழந்தை தொழிலாளிகள் அதிரடியாக மீட்பு...

டீக்கடையில் பணி புரிந்து கொண்டிருந்த ஐந்து குழந்தைகளை குழந்தை தொழிலாளிகள் தடுக்கும் விதத்தில் மீட்டுள்ளனர்.

5 குழந்தை தொழிலாளிகள் அதிரடியாக மீட்பு...

சென்னை மண்ணடி மற்றும் பூக்கடை பகுதியில் பேக்கரி, டீக்கடை, ஹோட்டலில் வேலை பார்த்து  வந்த ஐந்து குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அப்படி மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 5 பேரும்,  ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க | விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகளா....?

தொழிலாளர் நலத்துறை புகாரின் பேரில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்திய பேக்கரி டீ கடை, மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மீது குழந்தை தொழிலாளர் ( தடுப்பு- ஒழுங்குமுறை) சட்டம் 1986ன் கீழ் வழக்கு பதிவு செய்து 3 பேரை  தேடி வருகின்றனர்.

மண்ணடியில் இயங்கி வரும் பிஸ்மி ஹோட்டல், மற்றும் ஃபிர்தௌஸ் பேக்கரியில் இருந்து தலா இரண்டு சிறுவர்களும்,  பூக்கடையில் இயங்கி வரும் பாம்பே டீ ஸ்டாலில் இருந்து ஒருவரும் மீட்கப்பட்டு உள்ளனர்.

குழதைகளின் எதிர்காலம் கருத்தில் கொண்டு அவர்களது அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

மேலும் படிக்க | வாடகை தாய் விவகாரம்...நயன்தாராவிடம் விசாரணையா?