மனைவியை உறவினர்கள் ஆணவக்கொலை செய்ய முயற்சி... காதல் திருமணம் செய்த தலித் இளைஞர் புகார்...

ஈரோடு மாவட்டத்தில் தலித் இளைஞரை திருமணம் செய்த இளம்பெண்ணை அவரது உறவினர்கள் ஆணவக்கொலை செய்ய முயற்சிப்பதாகவும், அவர்களிடம் இருந்து தமது காதல் மனைவியை மீட்டு தர வேண்டும் எனவும், காவல் கண்காணிப்பாளரிடம் இளைஞர் புகார் கொடுத்துள்ளார்.
மனைவியை உறவினர்கள் ஆணவக்கொலை செய்ய முயற்சி... காதல் திருமணம் செய்த தலித் இளைஞர் புகார்...
Published on
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் சலங்கபாளையத்தை சேர்ந்த செல்வனும், பவானி குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த இளமதியும், கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளமதியின் உறவினர்கள், புதுமண தம்பதியை மிரட்டி, இளமதியை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றுள்ளனர். 

ஓராண்டாகியும் மனைவியை மீட்க முடியாத நிலையில், செல்வனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ள இளமதி, தம்மை ஆணவக்கொலை செய்ய உறவினர்கள் முயற்சிப்பதாக கூறியுள்ளார். இதனை கேட்டு பதறிப்போன செல்வன், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். தமது மனைவியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும், அவரை மீட்டுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com