மது வாங்கித் தர மறுப்பு,.  நண்பனை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த நபர்.! 

மது வாங்கித் தர மறுப்பு,.  நண்பனை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த நபர்.! 

மது வாங்கித்தராததால் தன்னை தாக்கிய நண்பனை கொன்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சென்னை முகப்பேர் கிழக்கு, நக்கீரன் சாலையை சேர்ந்தவர் ஆறுமுகம் (55). ஆறுமுகம் நேற்று நள்ளிரவு அம்பத்தூர் ரவுண்ட் பில்டிங் அருகில் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆறுமுகத்தை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஜெ.ஜெ. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆறுமுகம் தனது குடும்பத்தை பிரிந்து பிளாட்பாரத்தில் தங்கி குப்பைகளை பொறுக்கி விற்று வந்துள்ளார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் வயது (39) என்பவரும் குப்பைகளை பொறுக்கி விற்று தங்கி வந்துள்ளார். இருவரும் நண்பர்கள்.

இந்நிலையில் ஆறுமுகம் மதுகுடிக்க வாங்கி தரச் சொல்லி தன்னை தொந்தரவு செய்து கட்டையால் தாக்கியுள்ளார். இதனால்  வலி தாங்க முடியாமல் சிவகுமார் திருப்பி தாக்கியதில் கடையில் இருந்த ஆணி ஆறுமுகத்தின் தலையில் குத்தியதில் அவர் மயங்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்தது. 


இதைத் தொடர்ந்து ஜெ.ஜெ நகர் போலீசார் சிவகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.