பேனா பிடிக்கும் கையில் போதை பொருள்!!! பதற வைக்கும் வைரல் வீடியோ!!!

செங்கத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா பிடிக்கும் வீடியோ சமூக வளைதளங்களில் வைரல் ஆகியுள்ளதால், பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

பேனா பிடிக்கும் கையில் போதை பொருள்!!! பதற வைக்கும் வைரல் வீடியோ!!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சாவிற்க்கு மாணவர்கள் அடிமையாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் பள்ளி வளாகம் அருகே ரகசியமாக கஞ்சா வாங்கிவந்து பிடித்த வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து கஞ்சாவிற்பனை செய்பவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அப்பகுதி  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க | ரயிலில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்...! போலீசார் விசாரணை...!