ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த முதியவர் உடல் மீட்பு!!

ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த முதியவர் உடல் மீட்பு!!

கரூரில் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த முதியவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கரூர் ரயில் நிலையம் வெங்கமேடு மேம்பாலம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் முதியவர் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் குறித்து விசாரணை நடத்தியதில் நாமக்கல் மாவட்டம் பெரியப்பட்டியை சேர்ந்த பெத்தன் என்பது தெரியவந்தது.