ரயில்வே ஊழியரை கடுமையாக தாக்கிய நபர் - சிசிடிவியில் சிக்கிய அம்பலம்!

ரயில்வே ஊழியரை கடுமையாக தாக்கிய நபர் - சிசிடிவியில் சிக்கிய அம்பலம்!

சென்னை அயனாவரத்தில் ரயில்வே ஊழியரை கடுமையாகத் தாக்கி பணம், செல்போன் பறிக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது. மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய ரயில்வே ஊழியர் சங்கர் என்பவர் பனந்தோப்பு காலனி 7வது தெரு வழியாக செல்லும் போது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்து செல்போனை பிடுங்கும் முயற்சியில் ஈடுபட்ட போது சங்கர்  திருடன் என கூச்சலிட்டதால், அவரை  சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.