புதுச்சேரி: மர்மமான முறையில் மூதாட்டி உயிரிழப்பு - போலீசார் விசாரணை

புதுச்சேரியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி: மர்மமான முறையில் மூதாட்டி உயிரிழப்பு - போலீசார் விசாரணை

புதுச்சேரி அடுத்த சேதராப்பட்டு பகுதியில்  உண்ணாமலை என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில், நீண்ட நேரமாக அவர் வீட்டை விட்டு வெளியே வராததை அறிந்த அக்கம் பக்கத்தினர். சந்தேகத்தின் பேரில் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மூதாட்டி வீட்டில் வைத்து இருந்த நகைகள் காணாமல் போனதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ள நிலையில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.