புதுச்சேரி: பழிக்கு பழி...கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட கும்பல்..! போலீசார் போட்ட ஸ்கெட்ச்சில் கைது..!

போலீசாரை கண்டதும் தப்பியோடிய 4 பேருக்கு வலைவீச்சு..!

புதுச்சேரி: பழிக்கு பழி...கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட கும்பல்..! போலீசார் போட்ட ஸ்கெட்ச்சில் கைது..!

ரோந்து சென்ற காவல்துறை: புதுச்சேரி வடக்கு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சிலர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக வந்த தகவலை அடுத்து அப்பகுதிக்கு  காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த 11 பேரில், காவலர்களைக் கண்டதும் 4 பேர் தப்பி ஓடினர். 

இறந்த ரவுடியின் ஆதரவாளர்கள்: மீதம் இருந்த 7 பேரை சுற்றி வளைத்துப் பிடித்த காவலர்கள், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், 7 பேரும் அண்மையில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட  பிரபல ரவுடி பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது. 

கொலைக்கு ஸ்கெட்ச் போட்டது அம்பலம்: மேலும், பன்னீர்செல்வத்தைக் கொலை செய்ய உதவிய பிரசாந்த் என்பவரை, தங்கள் நண்பரின் மரணத்திற்காக பழிதீர்க்க அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. 

4 பேருக்கு வலைவீச்சு: இதையடுத்து 7 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.