பெற்ற தாயைக் காட்டிக் கொடுத்த மகனுக்கு குவியும் பாராட்டுகள்...

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்வதாக பெற்ற தாய் மீது மகன் புகார் அளித்துள்ளார்.

பெற்ற தாயைக் காட்டிக் கொடுத்த மகனுக்கு குவியும் பாராட்டுகள்...

திருநெல்வேலி | வடக்கன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள். இவருக்கும் அந்தோணி என்பவருக்கும் 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்து 4 குழந்தைகள் பிறந்தனர். கணவன் துபாயில் வேலை பார்த்திருக்க, அதே ஊரைச் சேர்ந்த காவலர் கண்ணன் என்பவருடன் கள்ளக்காதலில் ஐக்கியமானார் இசக்கியம்மாள். 

இந்த விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்ததையடுத்து அந்தோணியை விட்டு விட்டு கண்ணனுடன் சென்னைக்கு பறந்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் 42 வயதான இசக்கியம்மாள் சொந்த ஊருக்குள் பட்டதாரி இளைஞர்களிடம் வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் படிக்க | 45 ரூ. பதக்கத்தில் ஸ்டிக்கர் ஒட்டிதங்க பதக்கம் என ஏமாற்றிய கல்லூரி.. மாணவியின் வைரலாகும் வீடியோ...

வள்ளியூர், பரப்பாடி, ரெட்டியார்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஒரு சிலரிடம் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணத்தை வாங்கி ஏமாற்றியவர் கள்ளக்காதலன் கண்ணனுடன் கம்பி நீட்டினார். தற்போது சென்னையில் வசித்து வரும் இவர், மோசடி வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். 

இதற்கிடையே இளைய மகன் ஸ்டாலின் என்பவரை மீண்டும் தன்னுடன் வரக்கோரி மூத்த மகனுடன் சென்று சரமாரியாக தாக்கியிருக்கிறார் இசக்கியம்மாள். இதனால் வெகுண்டெழுந்த சிறுவன் ஸ்டாலின், பெற்ற தாயின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றுவதற்கு தயாரானான். 

மேலும் படிக்க | ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியைப் பேணும் இலட்சணமா? - சீமான் கண்டனம்!

தனது தாயார், இது போல பலரிடத்திலும் ஆசை வார்த்தை கூறி லட்சக்கணக்கில் ஏமாற்றியதாகவும், அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியவர், தன் தாயே தன்னை கொலை செய்வதற்கு முயற்சி செய்வதாக பகிரங்க குற்றச்சாட்டை விடுத்துள்ளார். 

வெளிநாட்டு வேலையின் மீது மோகம் கொண்ட இளைஞர்கள் இவ்வாறான சீட்டிங் கும்பலிடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்றும், பெற்ற தாயே தவறு செய்தாலும் அவரது பின்னணியை உலகுக்கு உணர்த்திய சிறுவனை பொதுமக்களும் போலீசாரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா திருவண்ணாமலையில் சாமி தரிசனம்