எலும்பு கூடாக கிடந்த மனித உடல்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ளஇளைஞர் ஒருவர் கொலை செய்த வழக்கில் 3 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

எலும்பு கூடாக கிடந்த மனித உடல்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை.. இவரது மகன் விஜய் வயது 22.. இவர் அதே கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்..

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி அன்று இரவு 8.30 மணி அளவில் விஜய் மளிகைக் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு வராமல் இரு சக்கர வாகனத்துடன் காணாமல் போனார். விஜய்யின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.. இதையடுத்து கடந்த 20 ஆம் தேதி அன்று விஜய்யின் அண்ணன் நாகமணி தெள்ளார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

அப்போது விஜய்யின் செல்போன் நம்பரை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்த நிலையில் தெள்ளார் காவல் நிலைய போலீசார் வந்தவாசி திண்டிவனம் சாலையில் காட்டேரி கிராமம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையின் போது அவர்களின் பதில்கள் சரியாக இல்லையா காரணத்தினால் போலீசார் மூன்று பேர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை  செய்தனர். 

விசாரணையில், வந்தவாசி அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மொய்தீன் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி வரதன் என்று தெரியவந்தது.. இதை தொடர்ந்து திடுக்கிடும் தகவல்களும் வெளிவந்தது..

காணாமல்போன விஜய்க்கும் மொய்தீனுக்கும் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்சனை இருந்ததாகவும்.. மொய்தீன் விஜய்யை போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் திருப்பித் தருவதாக கூறி வந்தவாசி அடுத்த நாவல்பாக்கம் கிராமம் அருகே வர வளைத்ததும் தெரியவந்தது. மேலும் விஜய்க்கும் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வரதன் நாராயணசாமி ஆகியோருக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

பின்னர் வற்றிய குளத்தில் அருகே வரதனை வெளியே நிற்க வைத்து.. மொய்தீன், விஜய் மற்றும் நாராயணசாமி ஆகிய மூன்று பேர்கள் மது அருந்தி கொண்டிருத்தனர். 

அப்போது நாராயணசாமி இரும்பு ராடு கொண்டு விஜய்யின் தலையில்  அடித்தும் கயிறு மூலம் கழுத்தில் இறுக்கியும் கத்தி மூலம் கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் அந்த சடலத்தை வரதன் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளார். மேலும் விஜய்யின் இருசக்கர வாகனத்தை அருகே உள்ள கிணற்றில் வீசிவிட்டு 3 பேரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர் என்று திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சூர் நாவல்பாக்கம் கிராமத்திற்கு சென்று பார்த்தபோது விஜய்யின் உடல் முற்றிலும் எலும்பு கூடாக மாறி இருந்தது. பின்னர் நிபுணர்கள் கொண்டு எலும்புக்கூட்டை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர். 

மேலும் விஜய்க்கு சொந்தமான பொருள்கள் அங்கு கிடப்பதை கண்டு இது விஜய்யின் உடல் என்று போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் அருகே உள்ள கிணற்றில் இருந்த இரு சக்கர வாகனத்தையும் போலீசார் மீட்டனர்.

பின்னர் விஜய்யை கொலை செய்த மொய்தீன், நாராயணசாமி மற்றும் வரதன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கொலை செய்வதற்கு பயன்படுத்திய இரும்பு ராடு மற்றும் கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.