சிலம்பரசன் செய்த சம்பவம்.. கதறிய மூதாட்டி.. வெளிவந்த பகீர் உண்மை!!

புதுச்சேரியில் மூதாட்டியை பலாத்காரம் செய்த இளைஞரை 2 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிலம்பரசன் செய்த சம்பவம்.. கதறிய மூதாட்டி.. வெளிவந்த பகீர் உண்மை!!

பாகூர் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 65 வயது மூதாட்டியை கடந்த ஜனவரி மாதம் இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை தேடி வந்தனர்.

இந்தநிலையில், கடலூரை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் அழைத்து விசாரித்ததில் மூதாட்டியை அவர் பலாத்காரம் செய்தது உறுதியானது. இவர் மீது திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ள நிலையில் கடந்த ஜனவரி 29ம் தேதி ஜாமீனில் வெளிவந்த அவர், ஆராய்ச்சிக்குப்பம் சாராயக் கடையில் மது அருந்திவிட்டு சென்றபோது மூதாட்டியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.