பீரோவில் இருந்த 50 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

பீரோவில் இருந்த 50 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

திருப்பத்தூர் மாவட்டம், குனிச்சி அருகே வீட்டின் பீரோவில் 50 சவரன் நகை மற்றும் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செல்வானூர் பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவர் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வரும் நிலையில் இவருடைய தாய் மற்றும் மனைவி சத்யா ஆகியோர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில், அதிகாலை வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், பீரோவிலிருந்த 50 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாயை திருடியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தியதோடு, விசாரித்து வருகின்றனர்.