ஆட்டோ ஓட்டுனருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. எதுக்கு இந்த கொலவெறி.. நீங்களே பாருங்க!!

ஆட்டோ ஓட்டுனருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. எதுக்கு இந்த கொலவெறி.. நீங்களே பாருங்க!!

சூதாட்டம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த ஆட்டோ டிரைவரை வெட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Published on

தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள சமத்துவ பெரியார் நகரில் ஆட்டோ டிரைவர் சக்தி மனைவியுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் பழைய துணி வியாபாரம் செய்து வருகிறார்.

சம்பவ நாள்:

சம்பவத்தன்று ஆட்டோ டிரைவர் சக்தி தனது ஆட்டோவை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வந்த மணிகண்டன் சக்தியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்தியின் முகம் மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். தடுக்க வந்த சக்தியின் சகோதரியையும் கர்ப்பிணியாக உள்ள சக்தியின் மனைவியையும் தாக்கி உள்ளார்.

பிரச்சனைக்கான காரணம்:

இதில் படுகாயமடைந்த 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பீர்க்கண்காரணை போலீசில் புகார் அளித்ததையடுத்து மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே சக்தியின் வீட்டுக்கருகே மணிகண்டன் தனது நண்பர்களுடன் சீட்டு விளையாடும் போது அடிக்கடி தகராறு ஏற்படுவது குறித்து ஆட்டோ ஒட்டுநர் சக்தி காவல் துறைக்கு தெரிவித்ததே பிரச்சினைக்கு காரணம் என தெரியவந்ததுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com