கொலையான வாலிபருக்கு நியாயம் கேட்டு மனு...

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கொலையான வாலிபருக்கு நியாயம் கேட்டு மனு...

சேலம் | ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தில் செங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் ஸ்ரீதர். இவருக்கும் பழையூர் பகுதியைச் சேர்ந்த விக்ரம் தரப்புக்கும் இடையே பைக் ரேஸ் ஓட்டுவதில் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மைக் செட் வைப்பதில் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விக்ரம் தரப்பைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீதரை கட்டையால் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்த ஸ்ரீதர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் படிக்க | ஆணவக்கொலை செய்யப்பட்ட கோகுல் ராஜ் தொடர்பான வழக்கு; மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

இது குறித்து ஓமலூர் போலீசார் விக்ரம் உள்பட 10 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர்கள் அப்பாவிகள் எனவும் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் இவர்கள்தான் என அப்பகுதியில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரின் புகைப்படங்களை மனுவில் இணைத்துள்ளனர்.

மேலும் படிக்க | போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய விவகாரம்...! உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்...!