வண்டிகளை நாசம் செய்த போதை ஆசாமிகள் கைது!

கொடுங்கையூரில் குடி போதையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வண்டிகளை நாசம் செய்த போதை ஆசாமிகள் கைது!

சென்னை: கொடுங்கையூர் - எருக்கஞ்சேரி அண்ணா சாலை முதல் குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் வயது 40 இவர் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி தரும் அகாடமி நடத்தி வருகிறார்.

இவரது காரை கடந்த மாதம் 12ஆம் தேதி இரவு வீட்டில் முன்பக்கத்தில் நிறுத்தி வைத்துவிட்டு உறங்கச் சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது இவரது கார் கண்ணாடி மற்றும் இவரது தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு கார்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்திருப்பது தெரியவந்தது. இது குறித்து கார்த்திக் மற்றும் மற்ற கார்களின் உரிமையாளர்கள் இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் படிக்க | ரீல்ஸால் சிக்கிய வழிப்பறி திருடன்... போலீசார் வலைவீச்சு...

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று கோவில் திருவிழா நடந்ததும் அதில் மது போதையில் இருந்த சிலர் தகராறில் ஈடுபட்டு போதையில் கார் கண்ணாடிகளை  அடித்து உடைத்ததும் தெரிய வந்தது.

இதனை அடுத்து இது குறித்து விசாரணை நடத்தி போலீசார் நேற்று

  • எருக்கஞ்சேரி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த லிங்கேசன் (19)
  • வியாசர்பாடி சர்மா நகர் பகுதியில் சேர்ந்த அசோக் (24)
  • எம் ஆர் நகர் பகுதியை சேர்ந்த சுகுமார் என்கின்ற ‘மாடு’ (30)
  • கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கின்ற ‘கோயில்’ கார்த்திக் (23)

ஆகிய நான்கு பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட துணை மேயர்...!