பெற்றோர்களே உஷார்!.. போதை பொருள் கொடுத்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. 4 பேர் கைது!!

போதை பொருள் கொடுத்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது.

பெற்றோர்களே உஷார்!.. போதை பொருள் கொடுத்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. 4 பேர் கைது!!

சென்னை விருத்தம்பாக்கத்தை சேர்ந்த தம்பதிக்கு 13 வயது மகள் ஒருவர் உள்ளார். இவர் ராமபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி, ராமபுரத்தை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது,

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வந்த அவருக்கு போதை மருந்து கொடுத்து மயக்கம் அடைய செய்துள்ளார். பின்னர் இளைஞரின் நண்பர்கள் என மொத்தம் 4 பேர் இணைந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாணவி சோர்வாக இருந்துள்ளார். இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதையடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.