பட்டபகலில் கடைக்குள் புகுந்து உரிமையாளரை கடத்திச் சென்ற மர்ம கும்பல்..! சிசிடிவி காட்சியால் பரபரப்பு

பட்டபகலில் கடைக்குள் புகுந்து உரிமையாளரை கடத்திச் சென்ற மர்ம கும்பல்..! சிசிடிவி காட்சியால் பரபரப்பு

சேலம் மாவட்டத்தில் பட்டப்பகவில் மளிகை கடைக்குள் புகுந்து உரிமையாளரை கடத்திச் செல்லும் மர்ம கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
Published on

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முல்லாராம் என்பவர் சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது மகன் ஜெயராம் கடையில் இருந்தபோது அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அக்கும்பல் ஜெயராமனை குண்டுகட்டாக தூக்கி சென்று மினி சரக்கு வாகனம் மூலம் அங்கிருந்து கடத்திச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கடத்தப்பட்ட உரிமையாளரை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொழில் போட்டி காரணமாக ஜெயராம் கடத்தி செல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com