சுடு தண்ணீரில் தவறி விழுந்த 4 வயது குழந்தை!! என்ன நடந்தது தெரியுமா?

சுடு தண்ணீரில் தவறி விழுந்த 4 வயது குழந்தை!! என்ன நடந்தது தெரியுமா?

குழந்தை ஒன்று வெந்நீரில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கோதண்டராமபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் தான் சார்லஸ். இவருக்கு 4 வயதில்   ஹேமா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி சார்லஸ் வீட்டில் குடிப்பதற்காக வெந்நீர் வைத்துள்ளார். அப்போது வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை ஹேமா எதிர்பாராத விதமாக சுடு தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்து விட்டாள்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சார்லஸ், உடனடியாக  தனது மகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை ஹேமா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com