கையில் பணமில்லை.. சோ.. பட்டா கத்தியுடன் ஆக்ஷனில் இறங்கிய நபர்கள்.. அதுவும் அங்கிருந்து வந்ததும்?

பல்லாவரம் அருகே பட்டா கத்தியை காட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

கையில் பணமில்லை.. சோ.. பட்டா கத்தியுடன் ஆக்ஷனில் இறங்கிய நபர்கள்.. அதுவும் அங்கிருந்து வந்ததும்?

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பிரதான சாலையில் அவ்வழியாக செல்லக்கூடிய நபர்களிடம் இருவர் பட்டா கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்று பார்த்ததில் போதையில் இருவர் கத்தியை காட்டி மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டதை கண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மீது ஏற்கெனவே கொலை கொள்ளை போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

விசாரணையில் கஞ்சா விற்பனை செய்து சிறைக்குச் சென்றுவிட்டு வெளி வந்தபோது கையில் பணம் இல்லாததால் இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.