"புதுசு புதுசா யோசிக்கிறாங்க".. வாங்க செல்ஃபி எடுக்கலாம்.. தங்க சங்கிலியுடன் மின்னல் வேகத்தில் தப்பிய பெண்!!

டிப்டாப்பாக இருசக்கர வாகனத்தில் வந்த இளம் பெண் செல்பி எடுப்பதாக கூறி சாலையில் நடந்து சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை நூதன முறையில் பறித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

"புதுசு புதுசா யோசிக்கிறாங்க".. வாங்க செல்ஃபி எடுக்கலாம்.. தங்க சங்கிலியுடன் மின்னல் வேகத்தில் தப்பிய பெண்!!

திருவள்ளூர் மாவட்டம் புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. கிறிஸ்துவ தேவாலயத்திற்கு வழிபாட்டிற்காக நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் டிப்டாப்பாக வந்த இளம் பெண், சாந்தி கழுத்தில் தங்க நகையை பார்த்தவுடன் வாகனத்தை நிறுத்தினார். 

பின்னர் அவரிடம் நீங்கள் கூட்டுறவு வங்கியில் நகை கடன் வைத்துள்ளீர்களா அந்த நகை தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும். வங்கிக்கு வந்தால் நகையை பெற்றுக்கொள்ளலாம் என நைசாக பேசி வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.  

சிறிது நேரத்தில் வாகனத்தை நிறுத்து விட்டு நகையை போட்டோ எடுக்க வேண்டும் எனக்கூறி அவர் கழுத்திலிருந்து நகையை கழற்றி போட்டோ எடுத்து பின்னர் நகையை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு அப்பெண்ணுடன் இணைந்து செல்பி எடுத்து கொண்டிருக்கும் போது மின்னல் வேகத்தில் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளார். இது தொடர்பாக சாந்தி கொடுத்த புகாரின் பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.