40 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்...! தீவிர விசாரணை நடத்தும் போலீசார்..!

ஆவடி கோவில்பதாகை பகுதியில் மத்திய அரசு ஊழியர் விட்டின் கதவை உடைத்து 40 சவரன் தங்க நகையை கொள்ளையடித்த மர்ம நபர்கள்..!

40 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்...! தீவிர விசாரணை நடத்தும் போலீசார்..!

ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியை சேர்ந்த  HVF தொழிற்சாலை ஊழியர் சிவகுமார். இவர் குடும்பத்துடன் மூலக்கடையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நேற்று இரவு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், சிவகுமார் வீட்டின் கதவை உடைத்து பிரோவில் வைத்திருந்த 40 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். 

இன்று காலை வீடு திரும்பிய சிவகுமார் காவல் நிலையத்தில் புகார் அழைத்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஓர் இரவில் நடந்த கொள்ளை சம்பவம், அதாவது சிவகுமார் நேற்று இரவு 8.30 மணிக்கு வீட்டை விட்டு சென்று காலை 5:30 மணிக்கு வீடு திரும்பிய நிலையில் 40 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.