தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்கள்...! வெளியான சிசிடிவி காட்சிகள்..!

தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்கள்...! வெளியான சிசிடிவி காட்சிகள்..!

தேன்கனிக்கோட்டை அருகே கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஆனெக்கல் அடுத்துள்ள இந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ்(40). இவர் குடும்பத்தோடு பண்ணை தோட்டத்திற்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஒன்றரை லட்சம் ரொக்கப்பணம் மற்றும் தங்கநகைகள் ஆகியவற்றை திருடிசென்றனர்.

இதேபோல் அந்த பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தில் கட்டியிருந்த ஆடுகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் அங்குள்ள கடைகளிலும் அதே நாளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் குறித்து மாதேஷ் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் ஆனெக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இந்தலவாடி கிராமத்தில் பள்ளி ஒன்றில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது அதில் நள்ளிரவு நேரத்தில் 2 இடங்களில்  5 மர்மநபர்கள் சாலையில் சென்றது தெரியவந்தது. இந்த 5 பேரில், 2 பேர் மாதேஷ் வீட்டுக்குள் புகுந்து பணம் மற்றும் தங்க நகைகளை திருடியதும், மற்ற 3 பேரும் ஆடுகளை திருடி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.