
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் வசித்து வரும் அருண்குமார் சேவல்களை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் அங்கு பட்டபகலில் சுற்றி திரிந்த மர்ம ஆசாமிகள் இருவர், யாருக்கும் சந்தேகம் எழாதவாறு லாவகமாக செயல்பட்டு, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சேவல்களை திருடி சென்றனர்.
இது குறித்து சேவலின் உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சூழ்நிலையில் திருட்டில் ஈடுபட்ட கந்தசாமி மற்றும் டேவிட் மனோகரன் ஆகிய இருவரும் போலீசாரின் வாகன தணிக்கையின்போது கையும், களவுமாக பிடிபட்டனர்.