தனியாக இருக்கும் பெண்களை குறிவைக்கும் மர்ம நபர்கள்.. சொகுசு காரில் சென்று கொள்ளை..!

மூதாட்டிகள் இருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிசிடிவியால் சிக்கிய இளைஞர்கள்..!

தனியாக இருக்கும் பெண்களை குறிவைக்கும் மர்ம நபர்கள்.. சொகுசு காரில் சென்று கொள்ளை..!

சென்னை கொரட்டூர் பாடி உள்ளிட்ட பகுதிகளில் தனியாக வீட்டில் இருக்கும் பெண்களிடம் தொடர்ந்து பணம் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்ட வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். பாடி பகுதியைச் சேர்ந்த மூதாட்டிகள் இருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனா். அதில் அப்பகுதியில் தனியாக  இருக்கும் மூதாட்டிகள் மற்றும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தொடர்ந்து பணம் மற்றும் செயின் பறிப்பில் சிலர் ஈடுப்பட்டு வந்ததாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார், மூதாட்டியின் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். 

அதில் குற்றவாளிகள் பட்டாகத்திகளுடன் செயின் பறிப்பில் ஈடுபட்டு சொகுசு காரில் தப்பி சென்றது தொியவந்தது. இதனை தொடர்ந்து, குற்றவாளிகள் எந்தெந்த பகுதியில் சென்றனர் என்பது குறித்து 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஒரு கட்டத்தில் குற்றவாளிகள் இருக்கும் இடத்தை நெருங்கினர்.  இதனை சுதாரித்துக் கொண்ட குற்றவாளிகள் செகுசு காரில் தப்பிக்க முயற்சி செய்தனா். அப்போது,  வானகரம் சுங்க சாவடி அருகே குற்றவாளிகள் சென்று கொண்டிருந்த பொழுது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து மூதாட்டியிடம் கொள்ளை அடித்துச் சென்ற நகை, இருசக்கரவாகனம் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.