லிப்ட் கேட்டு வந்த சிறுவனை கடத்தி சென்ற மர்ம நபர்கள்...!

லிப்ட் கேட்டு வந்த சிறுவனை கடத்தி சென்ற மர்ம நபர்கள்...!

திருவள்ளூர் மாவட்டம் போரூரைச் சேர்ந்தவர் சுசிலா. இவரது மகன் சபரி(18). இவர் போரூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று சுசீலாவை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர்கள், அவரது மகனை கடத்தி வைத்துக்கொண்டு ரூ. 30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போரூர் போலீசார் சபரியின் செல்போன் சிக்னலை வைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியில் கடத்தி வைக்கப்பட்டிருந்த சபரியை மீட்ட போலீசார், போரூர், காரம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி(25), விஜய்(21), ஆகிய இருவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது தாங்கள் விளையாடிவிட்டு வரும்போது அந்த சிறுவன் தங்களிடம் சிறிது தூரத்தில் விடுமாறு லிப்ட் கேட்டு வந்ததாகவும், பின்னர் அந்த சிறுவனை கடத்தி சென்று அருகில் உள்ள காலி இடத்தில் உட்கார வைத்து தங்களது காரை இடித்து விட்டதாக கூறி அதற்காக ரூபாய் 30,000 பணம் தர வேண்டும் எனவும் மிரட்டியதாக தெரிவித்தனர். 

மேலும் பணம் கேட்டு மிரட்டிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. லிப்ட் கேட்டு வந்த சிறுவனை கடத்திச் சென்று பெற்றோரிடம்  பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.