தென்னாப்பிரிக்கா இரவு விடுதியில் - இளம் வயதினர் 22 பேர் மர்ம மரணம்...

தென்னாப்பிரிக்கா இரவு விடுதியில் - இளம் வயதினர் 22 பேர் மர்ம மரணம்...

தென்னாப்பிரிக்காவின் இரவு விடுதியில் இளம் வயதினர் 22 பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் இரவு விடுதி செயல்பட்டு வருகிறது.

வார இறுதி நாள் என்பதால் இந்த விடுதியில் நிறைய பேர் கூடியிருந்தனர். இந்நிலையில், இரவு விடுதியில் 22 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.

உயிரிழந்தவர்கள் 18 முதல் 20 வயது வரையிலான இளம் வயதினர் என்றும் அவர்களது மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விடுதியில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனரா அல்லது வேறு ஏதேனும் விவகாரமா என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.