ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் கொலை வழக்கு.. ஒருவர் கைது

தஞ்சையில் ஆடு மேய்க்க சென்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரனை போலீசார் கைது செய்தனர்.

ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் கொலை வழக்கு..  ஒருவர் கைது

தஞ்சையில் ஆடு மேய்க்க சென்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை அடுத்த சூழியக் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கனகவல்லி, நேற்று காலை தனது ஆடுகளை மேய்ப்பதற்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் வழக்கம்போல் மாலை வீடு திரும்பும் கனகவல்லி, இரவு வெகுநேரமாகியும் திரும்பாததால், அவரது உறவினர்கள் கனகவல்லியை தேடி சென்றுள்ளனர்.

அப்போது அடர்ந்த வனப்பகுதியில் கனகவல்லியின் காலணி மற்றும் கை அரிவாள் கிடந்ததை கண்டு, உள்ளே சென்று பார்த்தபோது,  கனகவல்லி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன், அதே கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவனை கைது செய்தனர்.