கொரோனா பாதிப்பு: உதவிக்கு ஆள் இல்லாததால் தாய், மகள் தற்கொலை: தகவறிந்த கணவரும் அதிர்ச்சியில் பலி!  

மலேசியாவில் பணிபுரியும்  மென்பொருள் பொறியாளர் கொரோனா உதவிக்கு ஆள் இல்லாததால் மன விரக்தியில் தனது 5 வயது மகளுடன் 18 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர்கள் ரவிராஜா, சத்யாபாய் தம்பதி. இவர்களுக்கு 5 வயது மகள் உள்ள நிலையில் இருவரும்  மலேசியாவில் மென்பொருள் பொறியாளராக  15 ஆண்டுகளாக தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 14 தேதி ரவிராஜாவுக்கு கொரோனா  நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 16-ஆம் தேதி சத்யாபாய்க்கும் மகள் குகதாரணிக்கும்  நோய் தொற்று உறுதி செய்ய பட்டதாகவும். இவர்கள் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து  17 -ந் தேதி சத்யாபாய்க்கு உடல்நிலை மோசம் அடைந்ததாகவும்  இருவரையும் பார்த்துக்கொள்ளவும் உதவி செய்ய ஆள் இல்லாமலும் மன அழுத்தத்தில் தன் குழந்தையுடன் தவித்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன விரக்தி காரணமாக மாலை 6 மணி அளவில் தான் வசித்து வந்த பதினெட்டாவது  மாடியிலிருந்து 5 வயது மகளுடன் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனை அறிந்த அதிர்ச்சியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவர் ரவிராஜாவும்  உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி குழந்தை  உயிரிழந்தது திட்டக்குடியில் உள்ள உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.