2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு...தன்னைத் தானே மாய்த்துக்கொண்ட தாய்...நாமக்கல்லில் பரபரப்பு!

2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு...தன்னைத் தானே மாய்த்துக்கொண்ட தாய்...நாமக்கல்லில் பரபரப்பு!
Published on
Updated on
1 min read

நாமக்கல் அருகே தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், தனது 2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் காக்கா தோப்பு பகுதியை சேர்ந்த கோபி-குணவதி தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். கோபி தனது மாமனார் கேசவனுடன் சேர்ந்து டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கோபிக்கு முன்னதாக கேசவன் வீட்டிற்கு சென்ற நிலையில், தனது மகள் குணவதியுடன் அவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோபி வீட்டிற்கு வந்த போது, மனைவி மற்றும் மகன்கள் இல்லாததால், அருகே தேடியுள்ளார். அப்போது, அங்கிருந்த கிணற்றில் இரண்டு மகன்கள் சடலமாகவும் குணவதி மின் மோட்டார் பைப்பில் தூக்கிட்டு சடலமாகவும் இருந்துள்ளனர். 

தகவலறிந்து வந்த போலீசார், மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் குணவதி தனது 2 மகன்களை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மகள் இறந்த செய்தி கேட்டு, தந்தை கேசவன் தூக்க மாத்திரைகள் உண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இருப்பினும், தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் தனது மகன்களை கிணற்றில் வீசிவிட்டு, தாய் தற்கொலை செய்துக்கொண்ட  சம்பவம் நாமக்கல்லில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com