போலி முகநூல் கணக்கு மூலம் அதிமுக தொண்டர்களிடம் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெயரில் பண மோசடி ...

முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கியுள்ள மர்ம கும்பல், கட்சித் தொண்டர்களிடம் பண மோசடி செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போலி முகநூல் கணக்கு மூலம்  அதிமுக தொண்டர்களிடம்  முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெயரில் பண மோசடி ...

முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெயரில் உள்ள முகநூல் கணக்கில் இருந்து, தன்னுடைய நண்பர் ஒருவருக்கு அவசரமாக 10 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகவும், கூகுல் பே மூலம் பணத்தை குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்புமாறும், தொண்டர் ஒருவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதுபோன்று பலரிடமும் அமைச்சர் பெயரில் உள்ள அந்த முகநூல் கணக்கிலிருந்து பண வசூல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், ‘இந்த போலி முகநூல் கணக்கு மோசடி குறித்து தனக்கு தற்போது தான் தெரிய வந்ததாகவும், ஏற்கனவே தனது மனைவி பெயரில் இதுபோன்று நடந்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.

தற்போது தன்னுடைய பெயரில் மோசடி செய்து வரும் அந்த போலி முகநூல் கணக்கை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக விரைவில் சைபர் கிரைமில் புகார் அளிக்க உள்ளதாகவும் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.