மேடம் வாங்க நா டிராப் பன்றேன்.. இளைஞரின் கடத்தல் முயற்சி.. சார் நீங்க ஸ்டேஷன் வாங்க.. கூட்டிச் சென்ற போலீஸ்..!

இளைஞரிடம் இருந்து தப்பித்த மாணவி காவல்நிலையத்தில் புகார்..!

மேடம் வாங்க நா டிராப் பன்றேன்.. இளைஞரின் கடத்தல் முயற்சி.. சார் நீங்க ஸ்டேஷன் வாங்க.. கூட்டிச் சென்ற போலீஸ்..!

பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரிக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். 

லிஃப்ட் கொடுக்க நினைத்த இளைஞர்: அப்போது இளைஞர் ஒருவர், அந்த மாணவியிடம் வழி கேட்பது போல நடித்து, கல்லூரியில் இறக்கிவிடுவதாக அழைத்துள்ளார். கல்லூரிக்கு செல்ல தாமதமானதால் மாணவியும் அவரோடு சென்றுள்ளார். 

மாணவியை கடத்த முயற்சி: அந்த இளைஞர் கல்லூரியில் இறக்கிவிடாமல் மாணவியை வேறு வழியாக கடத்திச் செல்ல முயல, இதனால் அச்சமடைந்த மாணவி இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பினார். 

போக்சோ சட்டத்தின் கீழ் கைது: பிறகு, இதுகுறித்து தனது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து கெலமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அமைக்கப்பட்ட இரண்டு தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மாணவியைக் கடத்த முயன்ற கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.