மேலும் ஒரு தற்கொலை... என்று முடியுமோ இந்த தற்கொலை கதைகள்...?

கடன் தொல்லையால் அசிஸ்டன்ட் மேனேஜர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதை போலீசா ர்விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஒரு தற்கொலை... என்று முடியுமோ இந்த தற்கொலை கதைகள்...?

விழுப்புரம் | கோட்டகுப்பம் அடுத்த சின்ன முதலியார் சாவடி பகுதி சார்ந்தவர் பெருமாள் மகன் முத்துசாமி (வயது 31) கடலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அசிஸ்டன்ட் மேனேஜராக வேலை செய்துவருகிறார். கடந்த சில நாட்களாக மனவருத்தத்துடன் இருந்த முத்துசாமியை அவரது உறவினர்கள் கேட்ட பொழுது ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் போராட்டம் வடிவம் மாறும் - கி.வீரமணி எச்சரிக்கை

இந்நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்து வாக்கிங் செல்வதாக கூறிவிட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி கிடைக்காததால், அவரது உறவினர்கள் கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வந்தனர்.

கோட்டகுப்பம் கடற்கரை அருகே அவரது உடல் கரை ஒதுங்கியது. மேலும் பிரேதத்தைகைப் பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்துள்ளனர். மேலும் கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | சீட்டுக்கட்டு குறித்த பாடத்தை நீக்க வேண்டும்...அன்புமணி இராமதாஸ் அறிக்கை!