காதல் ஜோடி தற்கொலை... இன்றைய காலத்தில் இப்படி ஒரு காதலா?

தான் காதலித்த பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

காதல் ஜோடி தற்கொலை... இன்றைய காலத்தில் இப்படி ஒரு காதலா?

காஞ்சிபுரம் | உத்திரமேரூர் பேரூராட்சி கைலாசநாதர் கோயில் தெரு, ரேஷன் கடை எதிரே வசிக்கும் ஜெயராமன் - பவுனம்மாள் தம்மதியரின் மூத்த மகன் ஜெயராமன் வயது 28. உத்திரமேரூர் வாழைதோட்ட பின் தெருவில் வசித்துவரும் முருகன் மகள் யுவராணி வயது 27. இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

யுவராணியின் தந்தை முருகன் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் யுவராணி பெயரில் குளிர்பான கடை ஒன்றை நடத்தி வருகிறார். யுவராளியின் குடும்பத்தார் ஓரளவுக்கு வசதியான குடும்பம் தான். ஆனால், ஜெயராமன் குடும்பத்தார் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறது.

மேலும் படிக்க | 9 ஆண்டுகளுக்கு முன் மனைவியை கொன்ற கணவன்...! எலும்புகளை ஏரியில் வீசிய சம்பவம்...!

இந்நிலையில், ஜெயராமன் சென்னை பீர்க்கங்கரணையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையிலும், யுவராணியும் மறைமலை நகரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையிலும் வேலை செய்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்த போது, யுவராணியின் குடும்பத்தார் இருவரின் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் யுவராணிக்கு மாப்பிள்ளை ஒருவரை பார்த்து முடிவு செய்ததால், மனம் உடைந்து போன யுவராணி தான் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்னை பீர்க்கங்கரணையில் ஜெயராமன் வாடகைக்கு வீடு பிடித்து தங்கி இருந்த இடத்திற்கு சென்றுள்ளார்.

மேலும் படிக்க | சிம்-பாக்ஸ்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மோசடி...! இருவர் கைது...!

யுவராணி தனது வீட்டில் தனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாக கூறியதைக் கேட்டு கவலையில் ஆழ்ந்த ஜெயராமன் இனி நாம் சேர்ந்து வாழ முடியாவிட்டாலும் மரணத்தில் ஒன்றிணைவோம் என்று கூறி தற்கொலை முடிவுக்கு சென்றுள்ளனர்.

இருவரும் தங்கியிருந்த அறையின் மின்விசிறி மாட்டும் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த பீர்க்கங்கரணை போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு உத்திரமேரூருக்கு கொண்டுவரப்பட்டு தனித்தனியாக அவரவர் வீடுகளில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்ததால் இளம் காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | புதுசு புதுசா கிளம்புறாய்ங்களே... சைக்கிள் திருடன் வீடியோ வைரல்...