லவ்-வாம்.. மயங்கிய 17 வயது சிறுமி.. உஷாரான காதலன்.. கூட்டு முயற்சி.. கூண்டோடு கைது!!

ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே 17 வயது பள்ளி மாணவியை காரில் கடத்த முயன்ற 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

லவ்-வாம்.. மயங்கிய 17 வயது சிறுமி.. உஷாரான காதலன்.. கூட்டு முயற்சி.. கூண்டோடு கைது!!

முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

ஆன்லைன் வகுப்பில் படித்த போது அவரது தோழி மூலம் மதுரையில் உள்ள சதீஷ் (27) என்பவர் அறிமுகம் கிடைத்தது. பின்பு இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அந்த மாணவியின் தந்தை கண்டித்து செல்போனை பறித்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் காதல் வயப்பட்ட 17 வயது மாணவியை சதீஷ் ஆசை வார்த்தை கூறி நண்பர்களுடன் காரில் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இதைக்கண்டு, அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் மதுரை பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகன் மணிபாரதி (30), முத்துராஜ் மகன் பிரபு (20), பிச்சைமுத்து மகன் அஜித்குமார் உட்பட 4 பேரை முதுகுளத்தூர் போலீசார் கைது செய்து போக்சோ மற்றும் சிறுமியை காரில் கடத்த முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.