குடிபோதையில் போலீசாரை மிரட்டும் வழக்கறிஞர்... வைரலாகும் வீடியோ...

போலீசாரை மிரட்டும் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.

குடிபோதையில் போலீசாரை மிரட்டும் வழக்கறிஞர்... வைரலாகும் வீடியோ...
சென்னை வால்டாக்ஸ்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை வழக்கறிஞர் மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 
 
சென்னை வால்டாக்ஸ்ரோடு கொண்டித்தோப்பு பகுதியில் ஊரடங்கு காரணமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது,  அவ்வழியே வந்த வழக்கறிஞர் ஒருவரின் வாகனத்தை சோதனை செய்தபோது, வழக்கறிஞர் முகக்கவசம் அணியாமல் குடி போதையில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இந்நிலையில் போலீசார் வழக்கறிஞரை விசாரிக்க முற்பட்டபோது, வழக்கறிஞர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், தகாத வார்த்தைகளால் ஆவேசமாக பேசியுள்ளார்.
 
இந்நிலையில் அவர் மீது மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குதல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.