துப்பாக்கி சுடும் பயிற்சி செய்த சட்டக் கல்லூரி மாணவர் கைது...

நெல்லையில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்ட, சட்டக்கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

துப்பாக்கி சுடும் பயிற்சி செய்த சட்டக் கல்லூரி மாணவர் கைது...

நெல்லை | மகாராஜா நகரை சேர்ந்தவர் வெள்ளை சுந்தர் இவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியாக கருதப்படும் ராக்கெட் ராஜாவின் கூட்டாளி என்று கூறப்படுகிறது. மேலும் சென்னை உள்பட பல காவல் நிலையங்களில் வெள்ளை சுந்தர் மீது துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ளை சுந்தர் தனது உறவினரான டவுணை சேர்ந்த அஜய் கோபி (23) என்ற இளைஞருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குவது போன்ற வீடியோ ஒன்று சமிக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜய் கோபி நெல்லை சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.

மேலும் படிக்க | சொத்துக்காக அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்த தங்கை...

வீடியோ வெளியானதை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜய் கோபியை கைது செய்தனர் மேலும் தலைமறைவாக உள்ள வெள்ளை சுந்தரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் இச்சம்பவத்தில் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது, அஜய் கோபியின் நண்பர்களான தர்ஷன் (22) சிவா (22) இருவரும் கஞ்சா வியாபாரம் செய்த வழக்கில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். கடந்த வாரம் நெல்லை சந்திப்பு பாலத்தில் நடந்த விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர். அவர்கள் சிவா அஜய் கோபி தர்ஷன் ஆகியோரின் நண்பர்களாக இருந்துள்ளனர்.

மேலும் படிக்க | பேருந்து கவிழ்ந்து விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

எனவே அவர்களது இறுதிச் சடங்கில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அஜய், தர்ஷன், சிவா ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மோதலில் அஜய் கோபி புகார் செய்ததால் தர்ஷன், சிவா ஆகியோர் பாளையங்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காகவே அஜய் கோபி துப்பாக்கி பயிற்சி எடுக்கும் பழைய வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே வெள்ளை சுந்தருக்கும் அஜய் கோபிக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்படவே அவர்களும் பிரிந்துள்ளனர்.  இந்த நிலையில் தான் ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து அஜய் கோபியின் துப்பாக்கி வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க | திருட முயன்ற போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு....!