கிருஷ்ணகிரி: தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் கைது!!

கிருஷ்ணகிரி: தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் கைது!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி, மத்தூர் பகுதிகளில் பகல் நேரங்களில் ஆங்காங்கே திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரில் பேரில் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க ஊத்தங்கரை டிஎஸ்பி அலெக்சாண்டர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த தேடுதல் வேட்டையின் போது திருப்பத்தூர் மாவட்டம் கரும்பூர் கிராமத்தை சார்ந்த சக்திவேல் மற்றும் தாதவள்ளி மேகநாதன் ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். பிறகு இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் கிருஷ்ணகிரி கிளைச் சிறையில் அடைத்தனர்.