பழைய இரும்பு கடையில் பைக் விற்று கஞ்சா அடித்த சிறார்கள்...

ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 சிறார்கள் ஒன்று சேர்ந்து விலை உயர்ந்த பைக்கை திருடி பழைய இரும்பு கடையில் விற்பனை செய்து கஞ்சா அடித்த கதை அம்பலமாகியுள்ளது.

பழைய இரும்பு கடையில் பைக் விற்று கஞ்சா அடித்த சிறார்கள்...

காஞ்சிபுரம் | ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்த கஞ்சா, ஒயிட்னர், சொலிஷன் ஆகிய போதைகளுக்கு அடிமையான  ஐந்து சிறார்கள் ஒன்று சேர்ந்து பல இருசக்கர வாகனங்களை திருடி வந்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் NGO நகரில் தங்கி உள்ள சூரியன் என்பவரின் splendor இருசக்கர வாகனம் வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்தது திடீரென காணாமல் போயிருந்தது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பரிசோதனை செய்து சூரியன் மற்றும் அவருடைய  நண்பர்கள் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் தனது பைக்கை தேடி வந்துள்ளனர்.

ஏற்கனவே தாங்கள் வைத்துள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள மஞ்சள் நிறம் உள்ள பல்சர் NS இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு சிலர் வேறொரு பைக்கை திருட முயற்சித்த போது கையும் களவுமாக சூரியன் மற்றும் நண்பரிடம் மாட்டிக் கொண்டனர். உடனே ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அந்த கும்பலை  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க | ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல்.... அதிரடி சோதனை நடத்திய போலீசார்... !

அப்பொழுது போலீசார் விசாரித்த பொழுது தாங்கள் அனைவரும் கஞ்சா போதைக்கு அடிமை என்றும் இதுவரை நான்கு பைக்கை திருடி உள்ளோம் என்றும் அதில் விலை உயர்ந்த இருசக்கர வாகனமான   R15 இருசக்கர வாகனத்தை பார்ட் பார்ட்டாக பிரித்து நெமிலி சாலையில் உள்ள பழைய இரும்பு கடையில் வெறும் 2000 ரூபாய்க்கு விற்று கஞ்சா வாங்கி புகைத்தோம் என்று கூறியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 17 வயது கூட நிரம்பாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து சிறார்களிடமிருந்த  சூரியனின் ஸ்ப்ளெண்டர் பைக் உட்பட பல்சர் NS மற்றும் பல்சர் 220 என மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, தற்போது சிறார்கள் வேறு ஏதும் பைக்கை திருடி உள்ளார்களா என போலீசார் 5 சிறார்களிடமும் திருகித் திருகி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கஞ்சா வாங்குவதற்காக ரெண்டரை லட்சம் மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை பார்ட் பார்ட்டாக பிரித்து வெறும் 2000 ரூபாய்க்கு பழைய இரும்பு கடையில் விற்பனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | புதுசு புதுசா கிளம்புறாய்ங்களே... சைக்கிள் திருடன் வீடியோ வைரல்...