8 ஆயிரம் கோடி மோசடி! ஐ.எஃப்.எஸ் இயக்குனருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

ஆயிரம் கோடி கணக்கில் மோசடி செய்த ஐ.எஃப்.எஸ் நிறுவன இயக்குனர் லட்சுமி நாராயணனுக்கு, லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

8 ஆயிரம் கோடி மோசடி! ஐ.எஃப்.எஸ் இயக்குனருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் மோசடியில் ஈடுபட்ட ஐ.எஃப்.எஸ். நிறுவன தலைவர் லட்சுமி நாராயணனை பிடிக்க எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் லஷ்மி நாராயணன் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேலூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் IFS என்ற இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்விஸ் நிறுவனம் சார்பில், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு 8 ஆயிரம் ரூபாய் வட்டி கொடுப்பதாக கவர்ச்சி விளம்பரம் செய்யப்பட்டு, அதன் மூலம் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை பொதுமக்களிடம் இருந்து முதலீடாக பணம் பெறப்பட்டுள்ளது. 

ஆனால், கடந்த 3 மாதங்களாக வட்டி மற்றும் அசல் தொகையையும் தராமல் இந்த நிறுவனம்  ஏமாற்றியதால், பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகங்களில் புகார் அளித்தனர். தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் மனுக்கள் பெறப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் பகுதியில் இயங்கிவரும் ஐஎஃப்எஸ் அலுவலக இயக்குனர் ஜெகநாதன். சென்னையை சேர்ந்த குப்புராஜ் உட்பட 3 இயக்குனர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட நிறுவனர் லட்சுமி நாராயணன் என்பவரை பிடிப்பதற்காக, எஸ்.பி,.ஜெயச்சந்திரன் தலைமையில், 5 குழுக்கள் அமைக்கப்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, ஐ.எஃப்.எஸ் நிறுவன இயக்குநர் லட்சுமி நாராயணன் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.