மனைவியின் கள்ளக்காதலனை துடிக்க துடிக்க அறுத்த பயங்கரம்..!!

மனைவியின் கள்ளக்காதலனை துடிக்க துடிக்க அறுத்த பயங்கரம்..!!

பாகிஸ்தானில் மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்தவரின் காதையும் மூக்கையும் கணவர் அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் முசாஃபர்கர் கிராமத்தில் வசிப்பவர் அப்துல் கயாம். இவரின் மனைவியுடன் முகம்மது அக்ரம் என்பவர் கள்ளத்தொடரில் இருப்பதாக சந்தேகம் இருந்துள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அக்ரம் அவரது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவரை அப்துல் கயாம் அவரது நண்பர்களுடன் சேர்ந்து வழிமறித்துள்ளார்.

அவரை, ஆளில்லாத பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்குவைத்து அக்ரமின் காது மற்றும் மூக்கை அறுத்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அப்துல் கயாம் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்துல் கயாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார் .