போதையில் இருந்தவரிடம் பணம் கேட்டு மிரட்டல்...கொடுக்க மறுத்ததால் கத்தியால் குத்தி கிழித்த கொடூரம்...வடமாநில வாலிபர்கள் வெறிச்செயல்.!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே போதையில் இருந்த கட்டிட தொழிலாளியை வட மாநில வாலிபர்கள் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் இருந்தவரிடம் பணம் கேட்டு மிரட்டல்...கொடுக்க மறுத்ததால் கத்தியால் குத்தி கிழித்த கொடூரம்...வடமாநில வாலிபர்கள் வெறிச்செயல்.!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார். கட்டிட தொழிலாளியான இவர், ஓசூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்.

மதுபிரியரான இவர், நேற்று இரவு கர்நாடக மாநில எல்லையான பல்லூர் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். அளவுக்கு அதிகமாக மது அருந்திய அவரிடம் அங்கு மதுபோதையில் நின்ற வடமாநில வாலிபர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

மதுபோதையில் இருந்த வசந்தகுமார் அவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வடமாநில வாலிபர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தியால் வசந்தகுமாரின் வயிறு முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்த சென்றனர்.

இந்த தாக்குதலில் பலத்தகாயமடைந்த வசந்தகுமார் அங்கிருந்து தமிழக எல்லைக்கு நடந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் வலியால் துடித்த அவர், நடக்க முடியாமல் மயக்கமடைந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனைதொடர்ந்து இன்று அதிகாலை அந்த வழியாக வந்தவர்கள், படுகாயத்துடன் மயங்கி கிடந்த வசந்தகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த போலீசார். இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.