கடந்த ஆண்டில் மட்டும் இளம்பெண்களுக்கு எதிரான - குற்றங்களுக்காக 16,418 வழக்குகள் பதிவு!!

கடந்த ஆண்டில் மட்டும் இளம்பெண்களுக்கு எதிரான - குற்றங்களுக்காக 16,418 வழக்குகள் பதிவு!!

கேரளாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க விரைவு கோர்ட்டுக்கள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் அதை தொடர்ந்து தற்போது மேலும் 28 விரைவு கோர்ட்டுக்கள் அமைக்க மாநில அரசுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

கேரளாவில் இளம்பெண்களுக்கு எதிரான வழக்குகள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக சொல்லப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இருப்பினும் இளம்பெண்களை கொடுமைப்படுத்துவது, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது. இது தொடர்பாக கேரள போலீஸ் இலாகா சார்பில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிடைத்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் மட்டும் கேரளாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக மட்டும் 16 ஆயிரத்து 418 வழக்குகள் பதிவாகி உள்ளது.இது கடந்த 6 ஆண்டுகளை காட்டிலும் மிக அதிகம் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபோல போக்சோ வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு இங்கு 3,019 போக்சோ வழக்குகள் பதிவாகி இருந்தன.2021-ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 3,549 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 2,318 கற்பழிப்பு வழக்குகள், 4269 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன.

கேரளாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க விரைவு கோர்ட்டுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது மேலும் 28 விரைவு கோர்ட்டுக்கள் அமைக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.இதையடுத்து விரைவு கோர்ட்டுக்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.