பெற்றோர்களே உஷார்...வயிற்று வலிக்கு சிறப்பு பூஜையாம்...ஆனால் செய்வது வேற..?

பெற்றோர்களே உஷார்...வயிற்று  வலிக்கு சிறப்பு பூஜையாம்...ஆனால் செய்வது வேற..?

மாணவியின் வயிற்றுவலி பிரச்சினையை சிறப்பு பூஜை செய்து நான் குணப்படுத்துகிறேன்...

வயிற்று வலியை பூஜை மூலம் குணப்படுத்துகிறேன்:

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது. இதனை அறிந்த கோயில் பூசாரி பழனி(65 வயது முதியவர்) சிறுமியின் தாயாரை அணுகி, தான் சிறப்பு பூஜை மூலம் உன் குழந்தையின் வயிற்று வலியை குணப்படுத்துவதாக கூறியுள்ளார்.

சிறப்பு பூஜைகள்:

கோவில் பூசாரியின் வார்த்தையை நம்பிய அச்சிறுமியின் தாய், தன் குழந்தையை பூசாரி பழனியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தாயாரை வீட்டின் வெளியே அமர வைத்த பூசாரி பழனி, வீட்டிற்குள் தான் குறி பார்க்கும் அறையில் சிறுமியின் வயிற்று வலியை போக்க சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை:

அறையில் சிறப்பு பூஜை செய்வதாக கூட்டி சென்ற சிறுமியை, சம்பவத்தன்று பூசாரி பழனி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி 3 மாதம் கர்ப்பம் தரித்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி  புகார் அளித்துள்ளார்.

கைதான பூசாரி:

இந்த புகாரின் அடிப்படையில் கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கோயில் பூசாரி பழனி தான் குற்றவாளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, ஜூன் 10 ஆம் தேதி பூசாரி பழனியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தற்போது புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பூசாரி பழனியை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க புதுக்கோட்டை எஸ்பி வந்திதாபண்டேயின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டார்.
இதனையடுத்து பூசாரி பழனி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

எச்சரிக்கை:

சிறுமியின் வயிற்றுவலி பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறி அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து மூன்று மாத கர்ப்பிணியாக்கிய கோயில் பூசாரி மீது தற்போது குண்டர் சட்டம் பயந்து இருப்பது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அவர்களுக்கு மட்டுமின்றி மூடநம்பிக்கை என்ற பெயரில் பூசாரியை நம்புவது, அவர்கள் செய்ய சொல்வதை தெய்வ வாக்காக எண்ணி அப்படியே செய்வது போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் பின்விளைவுகளை யோசிக்காமல் செய்யும் பெற்றோர்களுக்கும் ஒரு பாடமாகவும், எச்சரிக்கையாகவும் இந்த நிகழ்வு அமையும்.