கள்ளக் காதல்..... கோயிலில் மனைவியை தாக்கிய கணவன்.... பரிதாபமாக உயிரிழந்தார்!!!

கள்ளக் காதல்..... கோயிலில் மனைவியை தாக்கிய கணவன்.... பரிதாபமாக உயிரிழந்தார்!!!

Published on

கள்ளத் தொடர்பை கண்டித்த மனைவியை கோயிலுக்குள்ளேயே வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியின் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன்.  45 வயதான இவர் காய்கறிகளை ஏற்றி செல்லும் லாரியை ஓட்டி வந்துள்ளார்.  இவர் சுமதி என்ற பெண்ணை காதலித்து 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். 

வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இந்த தம்பதிக்கு வேல்துரைச்சி மற்றும் துளசி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.  இந்நிலையில் மூத்த மகள் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வர, இளைய மகள் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். 

இப்படி பட்ட சூழலில் கண்ணனுக்கு ஊரில் வேறு ஒருவரிடம் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.  இதனால் கண்ணனுக்கும், சுமதிக்கும் இடையில் அடிக்கடி தகராறு எழுந்தது.  இந்நிலையில் 13-ம் தேதியன்று காலையில் கணவன் - மனைவி இருவரும் அருகில் உள்ள முத்தாரம்மன் கோயிலுக்கு சென்றனர். 

சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது சுமதி, கண்ணனைப் பார்த்து இனிமேலாவது நல்ல புத்தி வரட்டும் என்றும், கள்ளத் தொடர்பை கைவிடுமாறும் சத்தமாக வேண்டியுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், கோயிலில் சாமியை வைக்கும் ஊஞ்சல் கம்பியை எடுத்து சுமதியின் தலையில் சரமாரியாக தாக்கினார். 

ரத்தம் வழிய விழுந்த சுமதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து போனார்.  இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆலங்குளம் டி.எஸ்.பி. சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் மற்றும் போலீசார் சுமதியின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com